கடந்த முறை 6 சொற்களை படித்தறிந்தோம். அவை உங்கள் மனதில் பதிந்திருக்கும் என நம்புகின்றேன். முதலில் அந்த 6 சொற்களையும் என்னுடன் சேர்ந்து படியுங்கள். 您好, 你们好, 我, 我们, 他, 他们. இங்கு 们 (men) என்பது, பன்மையை வெளிப்படுத்தும் சொல்லாகும். 我- நான், 我们-நாங்கள், 你-நீ, 你们-நீங்கள், 他-அவர், 他们-அவர்கள். என்ன, புரிகிறதா?
இப்பொழுது, சீன மொழியில் நலம் விசாரிப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் இந்த உரையாடலைக் கேளுங்கள்.
A. 你好吗? (ni hao ma)
B. 我很好, 你好吗? (wo hen hao, ni hao ma)
A. 我也很好。(wo ye hen hao )
你好吗 (ni hao ma) என்றால், நலமா? என்று பொருள். 我很好(wo hen hao) என்பது, நான் நலம் என்று பொருட்படும். 我也很好 என்ற வாக்கியத்தின் பொருளானது, நானும் நலம் என்பதாகும்.
இப்பொழுது உரையாடலை மீண்டும் கேளுங்கள்.
A. 你好吗? நலமா?
B. 我很好, 你好吗? நான் நலம், நீ நலமா?
A. 我也很好。 நானும் நலமே.
இந்த உரையாடலில் இடம் பெற்ற吗? 很, 也 ஆகிய 3 புதிய சொற்களை இப்போது விளக்கிக் கூறுகின்றேன்.
ஒரு நண்பரைச் சந்திக்கும் போது, 你好吗? என்று விசாரிக்கலாம். இங்கு 吗? என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. ஒரு வினாக் குறியாகும். வார்த்தையின் கடைசியில் இது வரும். தமிழ் மொழியில் நலமா என்பதில் இடம் பெறும் "மா" என்பதற்கு சமமாக கூறலாம்.
很(HEN)என்பதற்கு மிகவும் என்பது பொருள்.
也 (YE)என்பது, தமிழ் மொழியிலான (உம்) என்ற சொல்லுக்குச் சமம். எழுவாய்க்குப் பின் இது வரும். எடுத்துக்காட்டாக, 我很好 நான் நலம்,你也很好 நீயும் நலம், 他也很好 அவரும் நலம், என்ன நேயர்களே புரிகிறதா? கடைசியாக, உரையாடலை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்.
A. 你好吗? நலம் தானே ?
B. 我很好, 你好吗? நான் நலம், நீ நலமா?
A. 我也很好。நானும் நலமே!
நேயர்களே, 3 புதிய சொற்கள் இடம்பெறும் உரையாடலைப் படித்திருக்கின்றோம். புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். பல முறை பயிற்சி செய்ய மறவாதீர்கள். அடுத்த முறை மற்றொரு உரையாடலை அறியலாம்
No comments:
Post a Comment