Showing posts with label தமிழில் சீனம். Show all posts
Showing posts with label தமிழில் சீனம். Show all posts

Sunday, May 1, 2011

தமிழ் மூலம் சீனம் பாடம் 4

கடந்த முறை 6 சொற்களை படித்தறிந்தோம். அவை உங்கள் மனதில் பதிந்திருக்கும் என நம்புகின்றேன். முதலில் அந்த 6 சொற்களையும் என்னுடன் சேர்ந்து படியுங்கள். 您好, 你们好, 我, 我们, 他, 他们. இங்கு 们 (men) என்பது, பன்மையை வெளிப்படுத்தும் சொல்லாகும். 我- நான், 我们-நாங்கள், 你-நீ, 你们-நீங்கள், 他-அவர், 他们-அவர்கள். என்ன, புரிகிறதா?

இப்பொழுது, சீன மொழியில் நலம் விசாரிப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் இந்த உரையாடலைக் கேளுங்கள்.

A. 你好吗? (ni hao ma)

B. 我很好, 你好吗? (wo hen hao, ni hao ma)

A. 我也很好。(wo ye hen hao )

你好吗 (ni hao ma) என்றால், நலமா? என்று பொருள். 我很好(wo hen hao) என்பது, நான் நலம் என்று பொருட்படும். 我也很好 என்ற வாக்கியத்தின் பொருளானது, நானும் நலம் என்பதாகும்.

இப்பொழுது உரையாடலை மீண்டும் கேளுங்கள்.

A. 你好吗? நலமா?

B. 我很好, 你好吗? நான் நலம், நீ நலமா?

A. 我也很好。 நானும் நலமே.

இந்த உரையாடலில் இடம் பெற்ற吗? 很, 也 ஆகிய 3 புதிய சொற்களை இப்போது விளக்கிக் கூறுகின்றேன்.

ஒரு நண்பரைச் சந்திக்கும் போது, 你好吗? என்று விசாரிக்கலாம். இங்கு 吗? என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. ஒரு வினாக் குறியாகும். வார்த்தையின் கடைசியில் இது வரும். தமிழ் மொழியில் நலமா என்பதில் இடம் பெறும் "மா" என்பதற்கு சமமாக கூறலாம்.

很(HEN)என்பதற்கு மிகவும் என்பது பொருள்.

也 (YE)என்பது, தமிழ் மொழியிலான (உம்) என்ற சொல்லுக்குச் சமம். எழுவாய்க்குப் பின் இது வரும். எடுத்துக்காட்டாக, 我很好 நான் நலம்,你也很好 நீயும் நலம், 他也很好 அவரும் நலம், என்ன நேயர்களே புரிகிறதா? கடைசியாக, உரையாடலை மீண்டும் ஒருமுறை கேளுங்கள்.

A. 你好吗? நலம் தானே ?

B. 我很好, 你好吗? நான் நலம், நீ நலமா?

A. 我也很好。நானும் நலமே!

நேயர்களே, 3 புதிய சொற்கள் இடம்பெறும் உரையாடலைப் படித்திருக்கின்றோம். புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். பல முறை பயிற்சி செய்ய மறவாதீர்கள். அடுத்த முறை மற்றொரு உரையாடலை அறியலாம்

Wednesday, April 27, 2011

தமிழ் மூலம் சீனம் பாடம் 3

கடந்த முறை மேலும் இரண்டு சொற்களைப் படித்தறிந்தோம். நீங்கள் பல பயற்சி செய்தீர்களா, மனதில் பதிந்துவிட்டதா. அவற்றை மீண்டும் பார்ப்போமா. இப்போது என்னுடன் சேர்ந்து படியுங்கள்.
下午好 (xia wu hao).

அடுத்து, 晚上好(wan shang hao), 晚上好.

இன்று மேலும் நான்கு சொற்களை அறிய இருக்கின்றோம்.

முதலில் 您好, சீனாவில், தன்னைவிட வயது கூடுதலானவர், மதிப்புக்குரியவர் ஆகியோருக்கு மரியாதை காட்டும் வகையில், அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் போது, 您好(NIN HAO)என்று சொல்ல வேண்டும். 您 (NIN) என்றால், நீங்கள் என்று பொருள். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள். 您好 (NIN HAO)您好.

அடுத்து, 你们好 (NI MEN HAO), இதில் 你们 (NI MEN)என்பது, 你(NI)என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். 2க்கு அதிகமானோர் இருந்தால், 你们 (NI MEN )என்று சொல்ல வேண்டும். நீங்கள் என்று இது பொருட்படும். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள். 你们好.

அடுத்து, 我(wo)என்ற சொல்லைக் காண்போம். 我(wo) என்றால் நான் என்பது பொருள். என்னுடன் சேர்ந்து படியுங்கள். 我(wo). 我们 (wo men)என்றால் நாங்கள் என்று பொருள். இது, 我(wo) என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள் 我们 (wo men).

அடுத்து, 他 என்ற சொல்லைப் பார்ப்போம். 他(ta) என்றால் அவர் என்று பொருள். என்னுடன் சேர்ந்து படியுங்கள் 他 (ta). 他们 (ta men)என்றால், அவர்கள் என்று பொருள். இது 他(ta) என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். என்னுடன் சேர்ந்து படியுங்கள் 他们 (ta men).

இன்று மொத்தம் 6 சொற்களைப் பார்த்தோம்., 您好(nin hao), 你们(ni men), 我(wo), 我们(wo men), 他(ta), 他们(ta men) என்பன அவை. 您好 (nin hao)என்பது, தன்னைவிட வயது கூடுதலானவருக்கு அல்லது மதிப்புக்குரியவருக்கு வணக்கம் தெரிவிக்கும் போது பயன்படுகின்றது. 你们(ni men) என்றால், நீங்கள், 我(wo) என்றால் நான், 我们 (wo men)என்றால் நாங்கள், 他(ta) என்றால் அவர், 他们(ta men) என்றால், அவர்கள். இவற்றை புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பின்பு, நீங்கள் கண்டிப்பாக வாசித்துப் பயிற்சி செய்ய வேண்டும்

courtesy: tamil.cri.cn

Saturday, April 23, 2011

lesson 2

தமிழ் மூலம் சீனம் பாடம் 2
வணக்கம் நேயர்களே, இன்று உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த முறை 4 சொற்களைப் படித்தோம். பாடத்துக்குப் பின், நீங்கள் அதிக முறை பயிற்சி செய்தீர்களா? மனதில் பதிந்துவிட்டதா? முதலில், அந்த 4 சொற்களை மீண்டும் பார்போம்.

சேர்ந்து படியுங்கள், 你好(NI HAO).

அடுத்து, 早上好(ZHAO SHANG HAO).

அடுத்து, 上午好(SHANG WU HAO).

இன்று மேலும் நான்கு புதிய சொற்களைப் படிக்கலாம்.

முதலில், 下午好 XIA WU HAO, "下午XIA WU" என்றால் பிற்பகல் என்று பொருள். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள். 下午好(XIA WU HAO).

இரவில், "晚上好 WAN SHANG HAO"என்று கூறுவர். "晚上 WAN SHANG" என்றால் இரவு எனப் பொருட்படும்.. இப்பொழுது சேர்ந்து படியுங்கள். 晚上好(WAN SHANG HAO).

இனி, 您好, சீனாவில், தன்னைவிட வயது கூடுதலானவரை சந்திக்கும் போது அல்லது மதிப்புக்குரியவரைச் சந்திக்கும் போது மரியாதை காட்டும் வகையில் 您好(NIN HAO)என்று சொல்ல வேண்டும். 您 (NIN) என்றால், தமிழ் மொழியில் நீங்கள் என்று பொருள். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள். 您好 (NIN HAO).

அடுத்து, 你们好 (NI MEN HAO), இதில் 你们 (NI MEN)என்பது, 你(NI)என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். எதிர்த் தரப்பில் 2க்கு அதிகமானோர் இருக்கும் போது 你们 (NI MEN )என்று சொல்ல வேண்டும். தமிழ் மொழியில் நீங்கள் என்று இது பொருட்படும். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள். 你们好(NI MEN HAO).

இப்பொழுது இன்று படித்ததை மீண்டும் படிப்போமா?.

முதலில்下午好(XIA WU HAO). என்னுடன் சேர்ந்து படியுங்கள்,下午好(XIAWU HAO). இதில் 下午(XIAWU) என்ற சொல் இப்போது நமக்குத் தெரிகிறது.

அடுத்து, 晚上好(WANSHANG HAO)என்னுடன் சேர்ந்து படியுங்கள். 晚上好(WAN SHANG HAO). இதில், 晚上(WAN SHANG) என்ற சொல்லைப் புரிந்துகொண்டோம்.

அடுத்து, 您好 ( NIN HAO), என்னுடன் சேர்ந்து படியுங்கள். 您好 (NIN HAO). இதில் 您 NIN என்ற சொல்லை தெரிந்துகொண்டோம்.

அடுத்து, 你们好 (NI MEN HAO), என்னுடன் சேர்ந்து படியுங்கள். 你们好(NI MEN HAO). இதில் 你们 (NI MEN)என்ற சொல் நமக்குத் தெரிகிறது.

இன்று மொத்தம் 4 சொற்களைத் தெரிந்துகொண்டோம், அவை 下午(XIAWU), 晚上(WAN SHANG), 您(NIN), 你们(NI MEN). இந்த 4 சொற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கும் என நம்புகின்றேன்

http://tamil.cri.cn

learn Chinese through Tamil

Lesson :1
தமிழ் மூலம் சீனம் பாடம் 1

வணக்கம் நேயர்களே, இன்று முதலாவது பாடம். அதன் தலைப்பு 问 候 (WEN HOU)என்பதாகும். தமிழ் மொழியில் வணக்கம் தெரிவிப்பது என்று பொருள்.

சீன வழக்கத்தின் படி, இருவர் சந்திக்கும் போது, ஒருவருக்கொருவர்你好(NI HAO)என்று கூறுவர்.

你 (NI) என்றால் தமிழில் (நீ) என்பது பொருள். 好 (HAO) என்றால் நன்று என்று பொருள். இதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எவரும் பயன்படுத்தலாம்.

你好 (NI HAO) என்று ஒருவருக்குச் சொல்லும் போது, எதிர் தரப்பினரும் 你好(NI HAO) என்று பதிலளிப்பார். தமிழரும் இப்படி தானே? இருவர் சந்திக்கும் போது, பரஸ்பரம் வணக்கம் தெரிவிப்பது வழக்கம் அல்லவா?

இப்பொழுது நீங்கள் எங்களுடன் சேர்ந்து படியுங்கள், 你好 (NI HAO)

சீன மக்கள் காலத்தை குறிப்பிட்டு வணக்கம் தெரிவிப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, காலையில் 早上好 (ZAO SHANG HAO)என்று கூறுவர்.

早上 (ZAO SHANG)என்றால் காலை என்பது பொருள்.

இப்பொழுது எங்களுடன் சேர்ந்து படியுங்கள். 早上好(ZAO SHANG HAO)

முற்பகல் 上午好 (SHANG WU HAO)என்று கூறுவர். 上午 (SHANG WU)என்றால் முற்பகலை குறிக்கும்.

இப்பொழுது எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

上午好 (SHANG WU HAO)

இப்பொழுது மீண்டும் படிப்போம்.

முதலில் 你好(NI HAO) என்பதை படிக்கின்றோம்.

你好(NI HAO)

இதில் 你(NI), 好(HAO), ஆகிய இரண்டு சொற்கள் நமக்குத் தெரியும்.

அடுத்து, 早上好(ZAO SHANG HAO) என்பதைப் படிக்கின்றோம்.

早上好(ZAO SHANG HAO): இதில் 早上(ZAO SHANG) என்பது நமக்குப் புரிகிறது.

இனி,上午好(SHANGWU HAO) என்பதைப் படிக்கின்றோம், 上午好(SHANGWU HAO): இதில் 上午(SHANGWU) என்பதை தெரிந்து கொண்டோம்.

ஆக, இன்று 4 சொற்களைத் தெரிந்துகொண்டோம் அவை, 你(NI)-நீ 好(HAO)-நன்று 早上(ZAO SHANG)-காலை 上午(SHANG WU)-முற்பகல் இந்த 4 சொற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா. பாடத்துக்குப் பின் அதிக முறை பயிற்சி செய்யுங்கள்