Wednesday, April 27, 2011

தமிழ் மூலம் சீனம் பாடம் 3

கடந்த முறை மேலும் இரண்டு சொற்களைப் படித்தறிந்தோம். நீங்கள் பல பயற்சி செய்தீர்களா, மனதில் பதிந்துவிட்டதா. அவற்றை மீண்டும் பார்ப்போமா. இப்போது என்னுடன் சேர்ந்து படியுங்கள்.
下午好 (xia wu hao).

அடுத்து, 晚上好(wan shang hao), 晚上好.

இன்று மேலும் நான்கு சொற்களை அறிய இருக்கின்றோம்.

முதலில் 您好, சீனாவில், தன்னைவிட வயது கூடுதலானவர், மதிப்புக்குரியவர் ஆகியோருக்கு மரியாதை காட்டும் வகையில், அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் போது, 您好(NIN HAO)என்று சொல்ல வேண்டும். 您 (NIN) என்றால், நீங்கள் என்று பொருள். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள். 您好 (NIN HAO)您好.

அடுத்து, 你们好 (NI MEN HAO), இதில் 你们 (NI MEN)என்பது, 你(NI)என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். 2க்கு அதிகமானோர் இருந்தால், 你们 (NI MEN )என்று சொல்ல வேண்டும். நீங்கள் என்று இது பொருட்படும். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள். 你们好.

அடுத்து, 我(wo)என்ற சொல்லைக் காண்போம். 我(wo) என்றால் நான் என்பது பொருள். என்னுடன் சேர்ந்து படியுங்கள். 我(wo). 我们 (wo men)என்றால் நாங்கள் என்று பொருள். இது, 我(wo) என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள் 我们 (wo men).

அடுத்து, 他 என்ற சொல்லைப் பார்ப்போம். 他(ta) என்றால் அவர் என்று பொருள். என்னுடன் சேர்ந்து படியுங்கள் 他 (ta). 他们 (ta men)என்றால், அவர்கள் என்று பொருள். இது 他(ta) என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். என்னுடன் சேர்ந்து படியுங்கள் 他们 (ta men).

இன்று மொத்தம் 6 சொற்களைப் பார்த்தோம்., 您好(nin hao), 你们(ni men), 我(wo), 我们(wo men), 他(ta), 他们(ta men) என்பன அவை. 您好 (nin hao)என்பது, தன்னைவிட வயது கூடுதலானவருக்கு அல்லது மதிப்புக்குரியவருக்கு வணக்கம் தெரிவிக்கும் போது பயன்படுகின்றது. 你们(ni men) என்றால், நீங்கள், 我(wo) என்றால் நான், 我们 (wo men)என்றால் நாங்கள், 他(ta) என்றால் அவர், 他们(ta men) என்றால், அவர்கள். இவற்றை புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பின்பு, நீங்கள் கண்டிப்பாக வாசித்துப் பயிற்சி செய்ய வேண்டும்

courtesy: tamil.cri.cn

1 comment:

Unknown said...

வணக்கம் ஐயா தமிழ் முலம் சீனம் பாடம் வாசித்தேன் 3 பகுதிகள் தான் இருக்கு மொத்தம் எத்தனை பகுதிகள் இருக்கொ அதையும் இந்த பிளாக்கில் போட்டால் மிகவும் நன்று..